டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி நடிப்பில் உருவாகி வரும் படம் ‛கங்குவா'. சரித்திரகால கதையில் இந்த படம் தயாராகிறது. ஓராண்டுக்கு மேலாக இதன் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதுவரை படத்தின் பர்ஸ்ட் லுக் என சொல்லப்படும் சூர்யாவின் முதல்பார்வை வெளியாகவில்லை. இந்நிலையில் வரும் ஜூலை 23ல் சூர்யா பிறந்தநாள் அன்று முன்னோட்டம் வெளியாகும் என ஒரு போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.
அதில் போருக்குச் செல்லும் மன்னர் போல மிருகத் தோலில் ஆன உடையணிந்த சூர்யாவின் தோள்பட்டை மற்றும் தழும்புகள் கொண்ட புஜம் தெரியும்படி புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் வைரலானதுடன் கங்குவா என்ற ஹேஷ்டேக்கும் சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆனது.
1500 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளுடன் கற்பனை, ஆக்ஷன், தமிழ் சினிமாவின் கமர்ஷியல் மசாலா கலந்து எடுக்கப்படும் இப்படம் மாவீரன், பாகுபலி, பொன்னியின் செல்வன்போல முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுக்கப்பட்டுள்ளது.