ரஜினியை இயக்கும் ‛டான்' இயக்குனர் : 2027 பொங்கலுக்கு ரிலீஸ் | 'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? | தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ? | இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய வெளியீடுகள் | சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா |

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து திரைக்கு வந்துள்ள படம் மாவீரன். இந்த படம் 50 கோடி வசூலை தாண்டி உள்ளது. அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு கேட்கும் அந்த குரலுக்கு விஜய் சேதுபதி தான் குரல் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய சிவகார்த்திகேயன், ‛‛எனக்கும், விஜய்சேதுபதிக்கும் எந்த போட்டியும் இல்லை. அவருடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறேன். அது விரைவில் நடைபெற வாய்ப்புள்ளது. மாவீரன் படத்தில் அவர் கொடுத்த குரலுக்கு ஒரு பைசா கூட விஜய் சேதுபதி சம்பளம் பெறவில்லை என்று கூறினார்.
அதையடுத்து அவர்கள் இணையும் படம், மாவீரன் படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் அடுத்த படமாக கூட இருக்குமோ என்கிற யூகங்கள் எழுந்துள்ளன.