'ஜனநாயகன்' டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பராசக்தி' | கிடப்பில் போடப்பட்ட பீமன் கதையை கையில் எடுக்கும் ரிஷப் ஷெட்டி | 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட் ரிஷி - நட்டி | பைக் பயணமாக தனுஷ்கோடிக்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர் | 20 நிமிடங்கள் வரை ட்ரிம் செய்யப்பட்ட ராஜா சாப் | ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் | அமெரிக்கா, இங்கிலாந்தில் தி ராஜா சாப் முன்பதிவில் சாதனை | 30 நாட்களில் 1,240 கோடி வசூலித்த துரந்தர் | சிவகார்த்திகேயனுடன் பேசுவதைத் தவிர்த்தாரா விஜய் ? | லோகா வாய்ப்பை மறுத்தீர்களா ? கேள்வியால் டென்ஷனான பார்வதி |

சென்னை தனியார் கல்லுாரியில் நடந்த 'பராசக்தி' இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் உற்சாகமாக பேசினார். ஜனநாயகன், விஜய், போட்டி, விமர்சனம், அரசியல் என பல விஷயங்கள் பற்றி மனம் திறந்தார். அவர் பேச்சின் ஹைலைட்:
* பராசக்தி எனும் பெயரே மிகுந்த வலிமை வாய்ந்தது. அந்த பெயருக்கு தக்கப்படி படமும் அதே அளவு தாக்கத்தை ஏற்படுத்தும். 1960 கால கட்டத்துக்கு டைம் டிராவல் செய்து பார்வையாளர்களை படம் அழைத்துச் செல்லும்.
* மாணவர்கள் எப்போதுமே சக்திவாய்ந்தவர்கள். அவர்கள் எந்த அளவுக்கு வலிமை கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதை இந்த படம் அழுத்தமாக காட்டுகிறது. இந்த படத்தின் கரு குறித்து பல கருத்துகள் வெளிவருகின்றன. ஆனால் பலரின் தியாகங்களை நாம் நேர்மறையாகவும் மரியாதையுடனும் பதிவு செய்திருக்கிறோம்.
* இந்த பட ஸ்கிரிப்ட் புத்தகத்தை கொடுத்து படிக்கச் சொன்னார். இந்த படத்தை நான் கண்டிப்பா பண்ணுறேன் இன்று இரவே ஸ்கிரிப்ட்டை படிச்சு முடிச்சுடுவேன்னு சொன்னேன். ஸ்கிரிப்ட் திறந்ததும் அது ஆங்கிலத்தில் இருப்பதை பார்த்து, மீண்டும் கால் செய்து இதுக்கு கொஞ்சம் நேரம் தேவைப்படும் என்றேன்.
* இயக்குனர் சுதா ரொம்ப ஸ்ட்ரிக்ட் அப்படின்னு நிறைய பில்ட் அப் கொடுத்திருந்தாங்க. படப்பிடிப்பில் அவர் சீன்களையே ஆங்கிலத்தில் தான் விளக்குவார். அதுவும் ஷேக்ஸ்பியர் ஆங்கிலம் மாதிரி! அதை நான் சரியாக பாலோ பண்ண முடியலை. நான் கவுதம் மேனன் சார் கூட வாழ்ற மாதிரி உணர்றேன்னு சொன்னேன். அதை கேட்டதும், அந்த நாளிலிருந்து சீன்களை முழுக்க முழுக்க தமிழிலேயே விளக்க ஆரம்பிச்சார். அவரிடமிருந்து கடுமையான உழைப்பு மற்றும் முழுமையான அர்ப்பணிப்பை கற்றுக்கொண்டேன்.
* ரவிமோகன் பார்த்தவுடன் என் கல்லூரி நாட்கள் நினைவுக்கு வந்தது. அவரின் 'எம். குமரன் சன்ஆப் மகாலட்சுமி' படத்தில் உடை, ஸ்டைல் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த படத்தில் ரவிமோகன் நடிக்கிறார் என்று இயக்குனர் சொன்னவுடன் தலைவர் மோடுக்கு போயிட்டு, எது ஜெயம் ரவி ஆ? ன்னு ரியாக்ட் பண்ணிட்டேன்.
* தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சுவாமி எவ்வளவு சக்திவாய்ந்த வில்லனாக இருந்தாரோ, அதே மாதிரி பராசக்தியில் ரவி சார் ஒரு மிகப் பவர்புல் வில்லன் கதாபாத்திரத்தில் வருகிறார்.
* நாங்க முதல்ல பராசக்தி படத்தை தீபாவளிக்குத்தான் பிளான் பண்ணோம். விஜய் அண்ணா படம் அக்டோபர் என சொன்னதும் நாம பொங்கலுக்கு போயிடலாம்னு தயாரிப்பாளரிடம் சொல்லி அதுக்காக பிளான் பண்ணோம். ஆனால், திடீரென ஜனநாயகன் படமும் பொங்கலுக்கு வருதுன்னு சொன்னதும் நான் உடனே ஜெர்க் ஆகிட்டேன்.
* தயாரிப்பாளரோ நம்ம இன்வெஸ்ட்டர்ஸ்க்கு எல்லாம் பொங்கல்னு சொல்லிட்டோம். இதுக்கு மேல புஷ் பண்ணா சம்மருக்குத்தான்னு சொன்னாரு. மேலும், அப்போ எலக்ஷன் வேற வருது. அதனால், நான் ஓகேன்னு சொல்லிட்டேன்.
* ஆனால், ஏதோ ஒன்று டிஸ்டர்ப் பண்ணிட்டே இருந்தது. உடனடியாக விஜய் சார் மேனேஜர் ஜெகதீஷ் போன் போட்டேன். பொங்கலுக்கு தாராளமா வரலாம்னு சொல்லிட்டார். உங்களுக்கு பிரச்னை இல்லை. எனக்குத்தான். நீங்க ஒரு வாட்டி விஜய் சாருக்கிட்ட பேசுங்க என்றேன். விஜய் சாரிடம் பேசிவிட்டு, லைன்ல வந்தார். அதெல்லாம் ஒன்னும் பிரச்னை இல்லை. சூப்பரா பொங்கலுக்கு வரட்டும். எஸ்கேவுக்கு என் வாழ்த்துகளை சொல்லிடுங்கன்னு சொன்னார்.
* 33 வருஷமா ஒரு மனுஷர் நம்ம எல்லாரையும் எண்டர்டெயின் பண்ணிருக்கார். அதனால ஜனவரி 9ம் தேதி ஜனநாயகன் பாருங்க, ஜனவரி 10ம் தேதி பராசக்தி பாருங்க. செலிபிரேட் பண்ணுங்க. யார் என்ன வேணாலும் சொல்லட்டும். நான் சொல்றேன். இது அண்ணன் - தம்பி பொங்கல் தான்.
* நானும் ஜி.வியும் இணைந்த 'அமரன்' ஹிட். இந்த படமும் நல்லா இருக்கும். அவரு 150வது படம், 200வது படத்தை விரைவில் பண்ணனும். தாய் மண்ணுக்காக அமரன், தாய் மொழிக்காக பராசக்தினு சொல்லலாம்.
* இன்னிக்கு சோஷியல் மீடியாவை சமாளிக்கிறது பெரிய கஷ்டம். இதுல, ஏஐ வேற. ஸ்ரீலீலா டான்ஸ் நல்லா இருக்கும். பராசக்தியில அந்த மாதிரி இல்லை. அடுத்த முறை பார்க்கலாம்.
* நடிக்கிறதுதான் என் வேலை. அதுதான் தெரியும். அரசியல் படம் பண்ணினாலும் ஆக்டிங்தான் எனக்கு வரும். இந்த மாதிரி மாறுபட்ட படங்கள் பண்ணலாம்னு ஆசைப்பட்டேன். எந்த கட்சி சார்ந்தும் படம் பண்ணியது இல்ல. அமரன் பண்ணும்போது கூட விமர்சனங்கள் வந்தது.