விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன் | ஜன.,10க்கு தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்'? | 'அகண்டா 2' மாதிரி ஆகிடுமா ஜனநாயகன் | ஜனவரி 30ல் வெளியாகும் ஜீத்து ஜோசப் படம் | நஷ்டமடைந்த 'ஏஜென்ட்' பட தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களுக்கு அகில் கொடுத்த வாக்குறுதி | ஆயிரம் படங்களில் நடித்த மூத்த மலையாள நடிகர் காலமானார் | 'மன சங்கர வர பிரசாத் காரு' படத்தின் மெகா புரமோஷனில் சிரஞ்சீவி கலந்து கொள்வாரா? | மூன்று வருடங்களுக்குப் பிறகு விஜய் பட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட புஷ்பா நடிகை | மீண்டும் சந்தித்த 'படையப்பா' படை | திரைப்பட பாடலாக உருவான சீமானின் மேடை பாட்டு |

சென்னையில் நடந்த 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பேசுகையில், ''இது என்னுடைய 100வது படம். முதல் படம் கொடுத்த தயாரிப்பாளர் ஷங்கர், இயக்குனர் வசந்தபாலன், 50வது படம் கொடுத்த விஜய்சார், 100வதுபடம் கொடுத்த இயக்குனர் சுதா, இந்த பயணத்தில் என்னுடன் நின்ற அனைவருக்கும் நன்றி. நீண்ட காத்திருப்புக்கு பின்னரே எனக்கு தேசியவிருது கிடைத்தது.
'வெயில், ஆயிரத்தில் ஒருவன், அசுரன்' படங்களுக்கு தேசியவிருது தவறியது. கடைசியில் சுதாவின் 'இறுதிச்சுற்று' படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. ஒரு சகோதரி மூலம் முதல் தேசிய விருது கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன்'' என்றார்.
ரவிமோகன் பேசுகையில், ''இந்த படத்துல ஒரு தீயை அழிக்கணும்னு நான் முயற்சி பண்றேன். ஆனா இந்த தீயை வெளிய சில பேர் அழிக்க பார்க்கிறாங்க. இந்த படம் பண்ணதுக்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு. ஒன்னே ஒன்னுதான். இந்த படம் சுயமரியாதையை காப்பாத்துறதைப் பற்றின படம். என் வாழ்க்கையில நானும் சுயமரியாதைய திரும்ப பெறுவதற்கு போராடுனேன். எல்லோருக்கும் ஒன்னு சொல்றேன். சுயமரியாதைய மட்டும் விட்டறாதீங்க. இது ஜி.வி.பிரகாஷ்க்கு 100வது படம் வாழ்த்துகள்'' என்றார்.
தனது சிஷ்யையை வாழ்த்திய குருநாதர் மணிரத்னம், ''சுதா என் உதவியாளர். அவரை பார்த்தாலே பல நடிகர்கள் பயப்படுவாங்க. சிவகார்த்திகேயன் ஸ்கிரிப்டை சரியாக தேர்ந்தெடுக்கிறார், வாழ்த்துகள்'' என வாழ்த்தினார். இயக்குனர் சுதா பேசுகையில், ''ஜனநாயகன், பராசக்தி என இரண்டு படங்களும் ஜெயிக்க வேண்டும்' என வாழ்த்தினார்.