தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் |

தெலுங்கில் சில நாட்களுக்கு முன்பு சாய் ராஜேஷ் இயக்கத்தில் ஆனந்த் தேவரகொண்டா, வைஷ்ணவி சைதான்யா உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த படம் பேபி. இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று உலகளவில் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்து வருகிறது. இந்த நிலையில் பேபி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதில் கதாநாயகியாக நடித்த வைஷ்ணவி சைதான்யா, தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், கீதா ஆர்ட்ஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சினிமா வட்டாரங்களில் அதிக படங்களில் நடிக்கும் அடுத்த ஸ்ரீ லீலாவாக வைஷ்ணவி வருவார் என பேசப்படுகிறது. இதற்கு முன்பு வைஷ்ணவி தமிழில் அஜித் நடித்த வலிமை படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.