தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி தற்போது தோனி என்டர்டெயின்மென்ட் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து முதல் தயாரிப்பாக தமிழில் 'எல்ஜிஎம்' என்ற படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தைத் தெலுங்கிலும் டப்பிங் செய்து ஜுலை 28ம் தேதி வெளியிடுகின்றனர். படத் தயாரிப்பு வேலைகளை தோனியின் மனைவி சாக்ஷி மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட சாக்ஷியிடம் பத்திரிகையாளர் ஒருவர், தெலுங்கில் ஏதாவது படங்களைப் பார்த்திருக்கிறீர்களா எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த சாக்ஷி, “நான் அல்லு அர்ஜுனின் எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். யு டியூபில் அவரது படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிடுவார்கள். அல்லு அர்ஜுன் படங்களைப் பார்த்து வளர்ந்தவள்தான் நான். அவரது பெரிய பெரிய ரசிகை நான்,” என்றார். அவரை வைத்து படம் தயாரிப்பீர்களா என்று கேள்விக்கு, “அதற்கு என்னிடம் பட்ஜெட் வேண்டுமில்லையா, இப்போதைக்கு அதற்கு வாய்ப்பில்லை, ஒரு நாள் நடக்கும் என நம்புகிறேன்,” என்றார்.
அல்லு அர்ஜுனின் ரசிகை நான் என தோனி மனைவி சாக்ஷி சொன்னதை அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.