ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் |
கடந்த 1995ம் ஆண்டில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மீனா, சரத்பாபு, ராதாரவி உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த படம் முத்து. கவிதாலயா நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படம் வெளிவந்த காலகட்டத்தில் வசூல் ரீதியாக பெரும் வெற்றியை பெற்றது. இந்தியாவை கடந்து ஜப்பானிலும் வசூலை குவித்தது.
இந்த நிலையில் முத்து படத்தை மீண்டும் தமிழ்நாட்டில் டிஜிட்டல் முறையில் 4K தொழில்நுட்பத்தில் ரீ மாஸ்டர் செய்து வருகின்ற டிசம்பர் 12ம் தேதி ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் செய்ய படக்குழுவினர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். ஏற்கனவே, ரஜினி நடித்த தனிகாட்டு ராஜா, பாபா ஆகிய படங்கள் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.