கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! |
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடனம் மாஸ்டராக பணியாற்றியவர் சாண்டி. அதோடு சில படங்களிலும் நடித்து வந்த அவர் தற்போது மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் கிப்ட் என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் அவரது நடன திறமையை வெளிப்படுத்தும் வகையில் பாடல் காட்சிகள் அமைந்திருப்பது மட்டுமின்றி இரண்டு அதிரடியான சண்டை காட்சிகளும் உள்ளதாம். அதில் டைவ் அடித்து, பல்டி அடித்து சண்டை செய்வது போன்ற ஷாட்டுகள் உள்ளதாம். அதனால் தற்போது அதற்கு தேவையான பயிற்சியில் தீவிரமடைந்திருக்கிறார் சாண்டி மாஸ்டர். அப்படி தான் பயிற்சி பெறும்போது எடுத்த வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கும் அவர் , அந்த வீடியோவில் தான் சிலம்பாட்டம் பயிற்சி பெறும் காட்சிகளையும் இணைத்திருக்கிறார்.