துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
நடிகை சமந்தா அவரது தசை அழற்சி நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக சினிமாவிலிருந்து ஒரு வருடம் விலகியிருக்கும் முடிவை எடுத்துள்ளார். அதற்கு முன்பாக சுற்றுலாப் பயணத்தில் இருக்கிறார். தற்போது இந்தோனேசியா நாட்டின் பாலி தீவில் இருக்கும் சமந்தா அங்கு ஐஸ் குளியல் செய்திருக்கிறார். “4 டிகிரியில் 6 நிமிடங்கள்” எனத் தலைப்பிட்டு அந்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
அடுத்து 'உலுவாட்டு' என்ற இந்து சமயக் கோவிலுக்குச் சென்ற புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்தோனேசியாவின் பாலி தீவில் பாடுங் என்ற இடத்தில் அசிந்தியன் என்ற கடவுளுக்குக் கட்டப்பட்ட கோவில் அது. நிலப் பகுதியின் விளிம்பில் கடலை நோக்கி அந்தக் கோவில் 70 மீ உயரக் குன்றின் மீது கட்டப்பட்டுள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் இணைந்து சக்தியைக் கொடுக்கும் இடமாக இது கருதப்படுகிறது. சமந்தாவின் சுற்றுப் பயணத்தில் ஆன்மிகப் பயணமும் முக்கிய இடம் பிடித்துள்ளது.