தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'. மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், சுனில், தமன்னா, மிர்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிரூத் இசையமைத்துள்ளார். இப்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இன்று ஜூலை 28ம் தேதி அன்று படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இதில் தமன்னா நடித்துள்ள கதாபாத்திரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் படி, "தமன்னா இப்படத்தில் தெலுங்கு நடிகையாக நடித்துள்ளாராம். அதனால் தான் காவாலா பாடலில் தமிழ், தெலுங்கு சொற்கள் கலந்துள்ளது என்கிறார்கள். சில குறிப்பிட்ட பகுதி நேரமே தமன்னா படத்தில் வருவாராம். மேலும், இதில் ரஜினிக்கு மனைவியாக ரம்யா கிருஷ்ணன் தான் நடித்துள்ளார் தமன்னா ஜோடி இல்லை" என்பது குறிப்பிடத்தக்கது.