ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! |

அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டவராக இருந்தாலும் 2000 ஆண்டில் காதல் ரோஜாவே என்ற தமிழ் படத்தில் அறிமுகமானவர் பூஜா குமார். அதன் பிறகு மேஜிக் மேஜிக் 3டி என்ற படத்தில் நடித்தவர், பின்னர் ஆங்கில படங்களில் நடித்து வந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு 2013ம் ஆண்டில் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு கமலுடன் உத்தம வில்லன், விஸ்வரூபம்- 2 மற்றும் மீன் குழம்பும் மண்பானையும் போன்ற படங்களிலும் நடித்தவர், விஷால் ஜோசி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 2020ம் ஆண்டில் பூஜா குமாருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதையடுத்து சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படம் மற்றும் தனது குடும்பத்தினரின் புகைப்படங்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். தற்போது தனது இரண்டரை வயது மகளுடன் நீச்சல் குளத்தில் ஜாலியாக குளித்து மகிழும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் தனது இரண்டரை வயது மகள் தானாக நீச்சல் செய்கிறார் என்று பெருமையோடு குறிப்பிட்டுள்ளார்.