படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

ரீ-ரிலீஸ் என்பது தற்போது தமிழ் சினிமாவில் டிரெண்ட் ஆக மாறிவிட்டது. 'வேட்டையாடு விளையாடு' படத்திற்குப் பிறகு 15 வருடங்களுக்கு முன்பு வெளியான 'சுப்பிரமணியபுரம்' படம் நாளை ரீ-ரிலீசாகிறது. கிளாசிக் படங்களை மீண்டும் வெளியிடும் இந்த வழக்கம் தற்போது தெலுங்கு சினிமா பக்கமும் போய்விட்டது.
தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, சமீரா ரெட்டி, சிம்ரன், ரம்யா மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'வாரணம் ஆயிரம்' படம் தெலுங்கில் 'சூர்யா சன் ஆப் கிருஷ்ணன்' என்ற பெயரில் டப்பிங் ஆகி அங்கு வரவேற்பைப் பெற்றது. அந்த படத்தை நாளை ஆகஸ்ட் 4ல், அங்கு ரீ-ரிலீஸ் செய்கிறார்கள். தமிழிலிருந்து தெலுங்கில் டப்பிங் ஆன ஒரு படத்தை அதிகமான தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள். அவற்றிற்கான முன்பதிவும் குறிப்பிடும் அளவில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இதற்கடுத்து செல்வராகவன் இயக்கத்தில் யுவன் இசையமைப்பில் ரவிகிருஷ்ணா, சோனியா அகர்வால் மற்றும் பலர் நடித்து வெளிவந்த '7 ஜி ரெயின்போ காலனி' படத்தின் தெலுங்கு டப்பிங்கான '7 ஜி பிருந்தாவன் காலனி' படத்தையும் ரி-ரிலீஸ் செய்ய உள்ளார்களாம். 4 கே மற்றும் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் படத்தை வெளியிடும் பணி தற்போது நடந்து வருகிறது. விரைவில் வெளியீடு பற்றிய அறிவிப்பு வரும் என்று தகவல்.