கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் |

பாலிவுட்டில் பிரபல இயக்குனர், தயாரிப்பாளர் என இரண்டு தளங்களில் வெற்றிகரமாக பயணித்து வருபவர் கரண் ஜோஹர். பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இவர், கடந்த சில வருடங்களாகவே படத் தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் 7 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் டைரக்ஷனில் இறங்கிய கரண் ஜோஹர் 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதில் ரன்வீர் சிங் கதாநாயகனாகவும், ஆலியா பட் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
கடந்த வாரம் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. குறிப்பாக 90களில் பார்த்த படங்களின் உணர்வை இது கொடுத்திருப்பதாக படம் பார்த்த பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் மலையாள நடிகை பார்வதி இந்த படத்தை பார்த்துவிட்டு தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், “இந்த படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது என் டி சர்ட்டின் காலர் நனைந்து ஒரு பக்கெட்டில் நிரப்பும் அளவிற்கு கண்ணீர் விட்டேன்'' என்று கூறியுள்ளார். மேலும், ரன்வீர் சிங் கதாபாத்திரம் மற்றும் நடிப்பு பற்றி குறிப்பிட்டுள்ள பார்வதி, “எனக்கும் இப்போது ஒரு ராக்கிவாலா தேவைப்படுகிறார்” என்று பாராட்டியுள்ளார்.
பார்வதியின் பாராட்டுக்கு ரன்வீர் சிங் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.