5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
மீசையை முறுக்கு பட நடிகர் ஆனந்த் இயக்கி நடித்துள்ள படம் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு'. இதில் குமரவேல், ஆர்.ஜே.விஜய், பவானி ஸ்ரீ, இர்பான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.எச்.காசிப் இசையமைத்துள்ள இப்படத்தை மசாலா பாப்கார்ன் நிறுவனம் தயாரித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சில வருடங்கள் கடந்தும் வெளியாகவில்லை. சமீபத்தில் இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு வழங்குவதாக படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளனர் இந்த வருடத்தில் இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.
இது நண்பர்கள் சம்மந்தப்பட்ட படம் என்பதால் நண்பர்கள் தின வாரத்தை முன்னிட்டு இந்த வார நாட்களில் இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவந்த சுப்பிரமணியபுரம், பாய்ஸ், பஞ்சதந்திரம், என்றென்றும் புன்னகை, சென்னை 60028 ஆகிய நண்பர்கள் சம்மந்தப்பட்ட பட போஸ்டர்களை ரீ - கிரியேட் செய்து இப்படக்குழுவினர்கள் வெளியிட்டு வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்து சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.