ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

திரைப்பட எழுத்தாளர் அஜயன்பாலா, ஏ.எல்.விஜய்யிடம் உதவியாளராக பணியாற்றி விட்டு தற்போது ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இதில் 'கன்னி மாடம்' ஸ்ரீராம் கார்த்திக், நாயகனாக நடிக்கிறார். 'கோலிசோடா 2' கிரிஷா குருப், யோகி பாபு, முனீஷ்காந்த் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை அஜய் அர்ஜுன் புரொடக் ஷன்ஸ் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிக்கிறார். செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். சித்துகுமார் இசையமைக்கிறார்.
இந்த படத்தில்தான் நா.முத்துகுமாரின் கடைசி பாடல் இடம் பெறுகிறது. இதுகுறித்து அஜயன்பாலா கூறும்போது "சூழலியல் பின்னணியில் உருவாகும் காதல் கதை இது. இந்தப் பின்னணியில் தமிழில் உருவாகும் முதல் படம் இதுவாகத்தான் இருக்கும். நான் ஏற்கெனவே உருவாக்க இருந்த படத்துக்காக நா.முத்துக்குமார் ஒரு பாடல் எழுதி கொடுத்திருந்தார். அந்த பாடலை பத்திரமாக வைத்திருந்தேன். அந்த பாடல் இந்த படத்தின் கதைக்கும் பொருந்துவதால் இந்த படத்தில் அந்த பாடலை பயன்படுத்த இருக்கிறேன். அவருடைய கடைசி பாடலாக அது இருக்கும்" என்றார்.