ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

பாலிவுட் நடிகை கியாரா அத்வானி சமீபத்தில் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் கியாரா அத்வானி. தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து வருகிறார்.
சமீப காலமாக அதிகமாக சினிமாவில் பேசப்படும் விஷயம் நடிகர்-நடிகைகளின் சம்பள விஷயம் தான். இப்போது இது குறித்து கியாரா அத்வானி தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். அதன்படி, "சம்பளம் விஷயத்தில் ஹீரோக்கள் விட ஹீரோயின்கள் குறைவான சம்பளமே பெறுகிறார்கள். இது குறித்து நீண்ட வருடங்களாக பேசி வந்தாலும் எந்தவித பிரயோஜனமும் இல்லை. நமது திறமையை பொறுத்து தான் சம்பளம் நிர்ணயிப்பார்கள். ஹீரோயின்கள் எந்தளவு ரசிகர்களை கவர்வார்கள் என்பதை பொறுத்து தான் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அதனால் நடிகைகள் தங்கள் நடிப்பு திறமையை அதிகப்படுத்தி கொள்ள வேண்டும். அதேபோல் நமது திறமைக்கு யார் அதிக மதிப்பு தருகிறார்களோ அவர்களுடன் இணைந்து பணியாற்ற முயற்சி செய்ய வேண்டும். அப்போது சம்பள விஷயத்தை பற்றி யோசிக்க வேண்டிய அவசியமே இருக்காது". என தனது கருத்துக்களை முன்வைத்து ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளார்.