ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மாவீரன் படத்தை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனது 21 வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க, ஜி.வி .பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராணுவம் தொடர்பான கதையில் இந்தப்படம் உருவாகிறது. மேஜர் முகுந்த் வரதராஜன் வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு சார்பில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் சுதந்திர தினம் குறித்து பேசியுள்ள சிவகார்த்திகேயன், ‛‛200 ஆண்டுகளாக அடிமைப்பட்டு கிடந்து போராடி பெற்ற இந்திய விடுதலையை போற்றுவோம். ஒவ்வொரு நாளும் இரவும் பகலும் வெயிலும் பனியும் பாராமல் இமயம் முதல் குமரி வரை கம்பீரமாய் நின்று நம்மை இன்று வரை சுதந்திர காற்றை சுவாசிக்க வைக்கும் ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குவோம். இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். தாய் மண்ணிற்கு வணக்கம்'' என தெரிவித்துள்ளார்.