தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் பிரபலமான ஹீரோவாக மாறினார் விஜய் தேவரகொண்டா. அதைத் தொடர்ந்து அவர் நடித்த கீதா கோவிந்தம் படத்தில் அவருடன் இணைந்து நடித்த கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனாவும் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். சொல்லப்போனால். குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற இன்கெம் இன்கெம் காவாலே என்கிற பாடலும் அதில் இவர்கள் இருவரின் நடிப்பும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டது. இதையடுத்து இந்த ஜோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடியாக மாறியது. இந்த படத்தை இயக்குனர் பரசுராம் இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் இந்தப் படம் வெளியாகி ஐந்தாம் வருடத்தை எட்டியுள்ளது. இதனை இயக்குனர் பரசுராமுடன் சேர்ந்து நாயகன் விஜய் தேவரகொண்டாவும் நாயகி ராஷ்மிகாவும் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இருவரும் நெருங்கிய நட்பில் இருந்து வருகின்றனர் என்றும் காதலிக்கின்றனர் என்றும் கூட சொல்லப்பட்டு வரும் நிலையில் இவர்கள் இருவரும் சமீப காலமாக பொது வெளியில் இணைந்து வருவதை தவிர்த்து வந்தனர். இந்த நிலையில் கீதா கோவிந்தம் படத்தின் ஐந்தாவது ஆண்டு விழாவை கொண்டாடுவதற்காக இருவரும் ஒன்று கூடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.