'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோவாக மாறுவது சினிமாவில் வழக்கமாக இருந்து வரும் நடைமுறை தான். அந்த வகையில் லேட்டஸ்டாக பிரபல தயாரிப்பாளர் ஏ.எல் அழகப்பனின் பேரனும் நடிகர் உதயா, இயக்குனர் விஜயின் சகோதரியின் மகனுமான ஹமரேஷ், ரங்கோலி என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ளார்.
கடந்த 10 வருடங்களுக்கு முன்பு விஜய் இயக்கத்தில் வெளியான தெய்வத்திருமகள் படத்தில் சுட்டிப்பெண்ணாக அறிமுகமான சாராவுடன் அவரது வகுப்பு தோழனாக இன்னொரு குறும்புக்கார மாணவராகவும் சொல்லப்போனால் அந்த படத்தில் விக்ரமுக்கு வில்லனாகவும் நடித்த சிறுவன் தான் இந்த ஹமரேஷ். அதன் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகமான மாநகரம் படத்திலும் படம் முழுவதும் வரும் கடத்தப்பட்ட சிறுவன் கதாபாத்திரத்தில் நடித்தவரும் இவர்தான்.
இந்த நிலையில் தற்போது ரங்கோலி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். பள்ளி மாணவர்களின் காதல் கதையை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மலையாள திரை உலகை சேர்ந்த இளம் நடிகை பிரார்த்தனா அறிமுகம் ஆகி உள்ளார். தனது மாமன்மார்களைப் போல இவரும் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பாரா ? பொறுத்திருந்து பார்க்கலாம்.