அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் |

இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அவருக்குப் பிறகு வேறு எந்த கிரிக்கெட் வீரரும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை. தற்போது இவரது வாழ்க்கையை மையமாக வைத்து '800' என்ற படம் தயாராகி வருகிறது. மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கியுள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார், ஜிப்ரான் இசை அமைக்கிறார்.
இதில் முத்தையா முரளிதரனாக 'ஸ்லம்டாக் மில்லியனர்' புகழ் மதுர் மிட்டல் நடிக்கிறார். முதலில் விஜய்சேதுபதி நடிப்பதாக இருந்தது. தமிழ்நாட்டில் உள்ள சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே விஜய்சேதுபதி விலகி கொண்டார். முத்தையா முரளிதரன் மனைவியாக மஹிமா நம்பியார் நடிக்கிறார். நரேன், நாசர், வேல ராம்மூர்த்தி, ரித்விகா, அருள் தாஸ், ஹரி கிருஷ்ணன், ஷரத் லோஹித்யா. உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
தற்போது படத்தின் இறுதிகட்ட பணி நடந்து வருகிறது. படத்தின் இந்திய தியேட்டர் திரையீட்டு உரிமத்தை ஸ்ரீதேவி மூவீஸின் உரிமையாளரான சிவலெங்க கிருஷ்ண பிரசாத் பெற்றுள்ளார். இந்த படம் தமிழில் படமாக்கப்பட்டது. தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளிலும் வெளியிடப்படுகிறது. இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கொச்சின், சண்டிகர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது.