மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' |
சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் சேவை மற்றும் பணியாளர்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்து அவ்வப்போது சில புகார்கள் வெளியாவது உண்டு. இதுபோன்ற நிகழ்வுகள் பல பிரபலங்களுக்கும் அவ்வப்போது ஏற்படுவது உண்டு. இதுகுறித்து அவர்கள் தங்கள் விமர்சனங்களையும், கண்டனங்களையும், எச்சரிக்கையையும் தெரிவிக்கவும் தவறுவதில்லை. அந்த வகையில் இது போன்ற ஒரு மோசமான அனுபவத்தை சென்னை விமான நிலையத்தில் எதிர்கொண்டிருக்கிறார் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, ஷங்கரின் பாய்ஸ் மற்றும் துருவ் விக்ரம் அறிமுகமான ஆதித்ய வர்மா உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ரவி கே.சந்திரன். சமீபத்தில் வெளியூர் சென்று விட்டு சென்னை விமான நிலையம் திரும்பிய போது இவரது உடைமைகள் லக்கேஜ் பிரிவிலிருந்து இவரது கைகளுக்கு வந்து சேர்வதற்கு நீண்ட நேரம் ஆனது. இது குறித்து அவருக்கு சரியான பதில் அளிக்கவும் அங்கு யாரும் தயாராக இல்லை.. “என்னுடைய 49 வருட பயண அனுபவத்தில் இதுபோன்று ஒரு மோசமான அனுபவத்தை எதிர்கொண்டதில்லை” என்று விரக்தியாக கூறியுள்ளார் ரவி கே.சந்திரன்.