இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
பீட்சா, சூதுகவ்வும் உள்ளிட்ட பல படங்களில் காமெடி, குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள கருணாகரன், அடுத்ததாக ‛குற்றச்சாட்டு' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். டிவைன் பிளாக்பஸ்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் விமல் விஷ்ணு இயக்குகிறார். இவர் மலையாளத் திரைப்படத் துறையிலும் ஊடக விளம்பரத் துறையிலும் 16 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் மிக்கவர். தவிர, 'நாய்கள் ஜாக்கிரதை' படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.
நடிகர்கள் பரத், தினேஷ் பிரபாகர், முன்னா சைமன், ரியாஸ் கான், ஷிவானி (குழந்தை நட்சத்திரம்) உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரானா என்பவர் நாயகியாக நடித்துள்ளார்.
படம் பற்றி இயக்குநர் விமல் விஷ்ணு கூறுகையில், ‛கொச்சியில் பல தமிழர்கள் வசித்து வருகின்றனர். அப்படி கொச்சியில் குடியேறிய அப்பா, அம்மா மற்றும் அவர்களின் அன்பு மகள் இவர்களை சுற்றி நடக்கும் கதைதான் 'குற்றச்சாட்டு'. அவர்களின் குழந்தை கொடூரமாக கொல்லப்பட்டு, குற்றவாளி நீதிமன்றத்தால் விடுவிக்கப்படும் போது, அப்பாவி தந்தை தனது மகளுக்கு நீதி கேட்க முயற்சி செய்கிறார். படம் ஆறு வெவ்வேறு அடுக்குகளுடன் நான் லீனியர் முறையில் எழுதப்பட்டுள்ளது. இந்த படம் அனைத்து தரப்பு பார்வையாளர்களின் ஆர்வத்தையும் ஈர்க்கும் வகையில் எமோஷனல் மற்றும் திரில்லர் கலவையாக இருக்கும். படப்பிடிப்பை முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன' என்றார்.