மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
'மாவீரன்' படத்துக்குப் பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்திற்கு தற்காலிக டைட்டிலாக 'எஸ்கே21' என்று வைக்கப்பட்டுள்ளது. இதனை கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்து வருகிறார். சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 75 நாட்களாக ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வந்தது.
தற்போது இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து சமூக வலைதளத்தில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, 'மீண்டும் சந்திப்போம், காஷ்மீர், எங்களை பாதுகாத்ததற்கு நன்றி. இந்த 75 நாட்கள் படப்பிடிப்பும் கனவு போல இருக்கிறது. படக்குழு அயராத உழைப்பும், காஷ்மீர் காவல்துறை, கமல்ஹாசன், எங்கள் ஹீரோ சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர்கள் ஆகியோரது ஆதரவும்தான் இதனை சாத்தியமாக்கியுள்ளது” என்று கூறியுள்ளார். அடுத்தகட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெறும் என்று தெரிகிறது.