பிளாஷ்பேக் : நம்பியாரை நாயகன் ஆக்கிய 'கல்யாணி' | மலைவாழ் மக்களின் கல்வியை வலியுறுத்தும் 'நறுவீ' | பிரபல டிசைனர் குமார் காலமானார் | ‛கூலி, வார் 2' ஜெயிப்பது யார்? | கூலி : ஆந்திராவில் மட்டுமே டிக்கெட் கட்டண உயர்வுக்கு அரசு அனுமதி | ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்ந்த போனி கபூர் | அடுத்தடுத்து தோல்வி படங்கள் : கீர்த்தி சுரேசுக்கு ரிவால்வர் ரீட்டா கை கொடுக்குமா? | ‛சக்தித்திருமகன்' ரிலீஸ் தேதி மாற்றம் | திரையுலகில் 50 ஆண்டுகள் : ரஜினிகாந்த்துக்கு உதயநிதி, இபிஎஸ், பிரேமலதா வாழ்த்து | 'எக்ஸ்க்ளுசிவ் ஒப்பந்தம்' : 'வார் 2' செய்வது சரியா ? |
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், விநாயகம் மற்றும் பலர் நடித்து ஆகஸ்ட் 10ம் தேதி வெளிவந்த படம் 'ஜெயிலர்'. இப்படம் 600 கோடி வசூலை நோக்கி நான்காவது வாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. செப்டம்பர் 7ம் தேதி இப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஓடிடியில் வெளியிட உள்ளார்கள்.
படம் வெளியான ஒரு மாதத்திற்குள்ளாகவே இப்படம் ஓடிடியில் வெளியாவது தியேட்டர்காரர்களுக்கு அதிர்ச்சியைத் தருவதாக இருக்கும். ஏற்கெனவே இது குறித்து தியேட்டர்காரர்கள் பல வேண்டுகோள்களை விடுத்துள்ளனர். இருந்தாலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ரஜினியின் படம் கூட இப்படி வெளியாவது அவர்களுக்கு வருத்தம்தான்.
நான்கு வாரங்களுக்குள் ஓடிடி வெளியீடு என்பதை மாற்ற வேண்டும் என்பதுதான் அவர்களது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. விரைவில் இது குறித்து தியேட்டர்காரர்கள் கோரிக்கை வைக்க வாய்ப்புள்ளது.