துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தெலுங்குத் திரையுலகத்தின் இளம் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா, நடிகையான ராஷ்மிகா இருவரும் காதலிப்பதாக கடந்த சில ஆண்டுகளாகவே கிசுகிசு வெளியாகி வருகிறது. இருவரும் அது பற்றி எதுவும் சொல்லாமலேயே மறைத்து வருகிறார்கள். இதற்கு முன்பு இருவரும் ஒன்றாகச் சேர்ந்து மாலத் தீவுக்கு சுற்றுலா சென்றதாக ஒரு சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் தற்போது இருவரும் பகிர்ந்த புகைப்படங்களால் காதல் சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. கடந்த வாரம் தனது வீட்டு மாடியில் எடுத்த புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார் விஜய் தேவரகொண்டா. நேற்று ராஷ்மிகாவும் சில புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். அவர் எடுத்த புகைப்படம் விஜய் தேவரகொண்டா வீட்டு மாடி என ரசிகர்கள் மீண்டும் காதல் கிசுகிசுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.
ராஷ்மிகா அவரது உதவியாளர் திருமணத்தில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படம் அது. அந்த மண்டபத்தின் மாடி போலவே, விஜய் வீட்டின் மாடியும் இருக்காதா என்றெல்லாம் ரசிகர்கள் யோசிக்கவில்லை. இரண்டும் ஒரே இடம்தான் என்கிறார்கள். இந்த ஜோடி எப்போது தங்களது காதலைப் பற்றி சொல்லப் போகிறது என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.