துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 1990களில் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறந்தவர் மீனா. 2019ல் வித்யாசாகர் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த ஆண்டு வித்யாசாகர் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார்.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீனா மீளாமல் இருந்தார். பின்னர் படிப்படியாக அந்த சோகத்தில் இருந்து வெளியேறி தொலைக்காட்சி நிகழ்சிகளில் பங்கேற்றார். அவருக்கு பெரிய அளவில் பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக படங்களில் நடிக்காமல் இருந்த மீனா தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
மலையாள இயக்குனர் ஜெய ஜோஸ் ராஜ் இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்கிறார். அந்த படத்தின் கிளாப்போர்டை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, “மீண்டும் கேமரா முன்னால் நிற்பது மகிழ்ச்சியாக உள்ளது. இன்னொரு மறக்க முடியாத கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்'' என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார்.
மீனாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.