''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' | இயக்குனர் அவதாரம் எடுக்கும் கென் கருணாஸ்! |
பி. வாசு இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த சந்திரமுகி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது சந்திரமுகி இரண்டாம் பாகத்தை பி. வாசு நடிகர் ராகவா லாரன்ஸை வைத்து இயக்கியுள்ளார். கங்கனா ரணாவத், லட்சுமி மேனன், மகிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைக்கிறார் .
ஏற்கனவே இத்திரைப்படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 15ம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்தனர். இப்போது இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நிறைவு பெறாததால் செப்டம்பர் 28ம் தேதி அன்று திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற நாட்களில் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.