100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கனிமா' | ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய் | அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை | வேட்பு மனுவை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம் ; நீதிமன்றத்தை நாடும் பெண் தயாரிப்பாளர் | இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா |
எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பலர் சினிமாவில் அறிமுகமாக காரணமாக இருந்தவர் பழம்பெரும் நடிகர், தயாரிப்பாளர் டி.வி.நாராயணசாமி. அவரது நூற்றாண்டு விழாவை அவரது குடும்பத்தினர் கொண்டாடினார்கள். சென்னை தியாகராய நகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கில் நேற்று மாலை இந்த விழா நடைபெற்றது. விழாவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கி, டி.வி.நாராயணசாமியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை வெளியிட்டார். முதல் பிரதியை வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் பெற்றுக் கொண்டார். டி.வி.நாராயணசாமியின் உருவப்படத்தை தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் திறந்து வைத்தார்.
விழா மலரை இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திர சேகர் வெளியிட தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் பெற்றுக் கொண்டார். விழாவில் வீட்டு வசதி வாரிய தலைவரும் நடிகர் சங்க துணை தலைவருமான பூச்சி முருகன், தி.மு.க. மகளிரணி தலைவர் விஜயா தாயன்பன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜி.ராமகிருஷ்ணன், நல்லி குப்புசாமி, ஓவியர் மருது உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.