மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? |

விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் கமல்ஹாசன், இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். அதற்குள் அவரது 234வது படத்தை மணிரத்னம் இயக்கப்போவதாக அறிவிப்பும் வெளியானது. இதனால் இந்தியன்-2 படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், துணிவு படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் மணிரத்னம் - கமல்ஹாசன் இணையும் படம் தாமதமாகும் என ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். இந்த நிலையில் ‛சைமா' விருது விழாவில் விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், இயக்குநர் மணிரத்னத்திடம் ‛கமல் 234' பட அப்டேட்டினை கேட்டார். அதற்கு மணிரத்னம், “தயாரிப்பாளரிடம் கேளுங்கள்” என்றார்.
பிறகு அப்படத்தை தயாரிக்க உள்ள கமல் கூறுகையில், “ஒரு நிஜமான ரசிகன் என்ன செய்ய வேண்டுமோ அதை லோகேஷ் சரியாக செய்துவிட்டார். எந்தப் பதட்டமும் இல்லாமல் நாயகன் படத்துக்கு எப்படி வேலை பார்த்தோமோ அப்படிதான் இதற்கும் பார்த்து வருகிறோம். உங்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நிற்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து வருகிறோம். இந்த தாடிக்கூட அதற்காகதான். எதையெல்லாம் வளர்க்க முடியுமோ அதையெல்லாம் வளர்த்து வருகிறோம்” எனக் கூறினார்.
மணிரத்னம் - கமல் கடைசியாக 36 வருடங்களுக்கு முன்னதாக ‛நாயகன்' படத்தில் இணைந்திருந்தனர். அப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது.