தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானாலும் இன்றைக்கு பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் டாப்ஸி. சினிமாவில் நடிப்பதோடு கங்கனா ரணாவத் போன்று நாட்டு நடப்புகள் பற்றிய தனது கருத்துகளை துணிச்சலாக சமூக வலைத்தளங்களில் பேசி வருகிறவர். சினிமாவில் நடிப்பதோடு தனது தங்கையுடன் இணைந்து வெட்டிங் பிளானர் உள்ளிட்ட பல தொழில்களையும் நடத்தி வருகிறார். சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களும் தயாரித்து வருகிறார்.
தற்போது ஹிந்தியில் ஷாரூக்கானுடன் 'டன்கி', தமிழில் 'ஏலியன்' ஆகிய படங்களில் நடிக்கிறார். இந்நிலையில், மெர்சிடிஸ் மெபேக் ஜிஎல்எஸ் மாடல் சொகுசு காரை டாப்ஸி வாங்கியுள்ளார். இதன் மதிப்பு 3.5 கோடி.
டாப்ஸி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்கள். டாப்சி சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகைகள் கோடி கணக்கில் செலவு செய்து சொகுசு கார் வாங்குவதை கிண்டல் செய்திருந்தார். அதை தற்போது கூறி டாப்ஸியை கிண்டல் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.