2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் |

மலையாளத்தில் கடந்த 2015ல் பிரித்விராஜை வைத்து 'என்னு நிண்டே மொய்தீன்' என்கிற ஹிட் படத்தை கொடுத்தவர் இயக்குனர் ஆர்.எஸ்.விமல். அந்தப் படத்தை தொடர்ந்து, வரலாற்று கதாபாத்திரமான மகாபாரத கர்ணனை மையமாக வைத்து பிரித்விராஜ் ஹீரோவாக நடிக்க ‛மகாவீர் கர்ணா' என்கிற படத்தை ஆரம்பித்தார். சில காரணங்களால் பிரித்விராஜ், அந்த படத்திலிருந்து விலகிக் கொள்ளவே, அதைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் மீண்டும் அந்த கதையை இந்தி உட்பட மும்மொழிகளில் பிரமாண்டமாக படமாக்கும் வேலைகளில் இறங்கினார் ஆர்.எஸ்.விமல். நடிகர் சுரேஷ் கோபியும் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்தார்.
சுமார் 300 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக இது உருவாகிறது என சொல்லப்பட்டது. 2019ல் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பில் விக்ரமும் சில நாட்கள் கலந்து கொண்டு நடித்தார்; இந்த படம் குறித்து சிலாகித்தும் பேசி வந்தார். ஆனால் அதன்பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேலாக இந்த படம் குறித்து எந்த தகவலும் இல்லை. சொல்லப்போனால் இந்த படம் கைவிடப்பட்டதாகவே சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது இயக்குனர் ஆர்.எஸ் விமல் தனது சோசியல் மீடியா பக்கத்தில் கர்ணனாக நடிக்கும் விக்ரமின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ‛சூரிய புத்திரன் கர்ணன் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது' என்கிற தகவலை அப்டேட் செய்துள்ளார். முதல் படத்தை வெற்றி படமாக கொடுத்தாலும் தனது இரண்டாவது படத்தை துவக்க கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக இயக்குனர் ஆர்.எஸ்.விமல் போராடி வருகிறார் என்பது அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளிக்கும் செய்தி தான்.