தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் | எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு | தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே | கமல்ஹாசன் வாழ்த்தினார் : மற்றவங்க தேசிய விருது பெற்றவர்களை பாராட்டாத சினிமாகாரர்கள் |
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடிக்க உள்ள 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் ஆரம்பமாக உள்ளது. துபாய், அபுதாபி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என முதலில் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் அஜர்பைஜான் நாட்டிலும் படப்பிடிப்பை நடத்த உள்ளார்களாம். முதல் கட்டப் படப்பிடிப்பு அங்குதான் நடைபெற உள்ளதாம்.
இதற்காக அஜித் அஜர்பைஜான் நாட்டிற்குக் கிளம்ப உள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யுடன் 'லியோ' படத்தில் நடித்த த்ரிஷா, அதே போல நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் நடிக்க உள்ளார். 'லியோ' படத்தில் நடித்த ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று தகவல்.
இடைவிடாமல் படப்பிடிப்பை நடத்தி 2024ம் ஆண்டின் முதல் பாதியிலேயே படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். 2024 மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாளில் இப்படம் வெளியானால் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான்.