சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு |

கடந்த 2018ல் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் தொடங்கிய படம் 'அயலான்'. ரகுல் ப்ரீத் சிங் , இஷா கோபி கார், யோகி பாபு,கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது. அதன் பிறகு படப்பிடிப்பு நிறைவு பெற்றும் ஒரு சில காரணங்களால் படம் கிடப்பில் போடப்பட்டது.
சமீபத்தில இந்த படம் இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நிறைவு பெறாததால் 2024 பொங்கலுக்கு தள்ளி வெளியாகிறது என அறிவித்தனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் டீசர் வருகின்ற அக்டோபர் 6ம் தேதி வெளியிட படக்குழுவினர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.