பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்யநாராயணா, ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நல மேம்பாட்டு துறை அமைச்சரான நடிகை ரோஜாவின் தனிப்பட்ட வாழ்க்கை முறையை இழிவுபடுத்தும் விதமாக பேசினார். இதற்கு ஆந்திர மகளிர் ஆணையம் சார்பில் கண்டனம் தெரிவித்து டிஜிபிக்கு புகார் அளித்தனர். இதனையடுத்து குண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்னாள் அமைச்சர் சத்திய நாராயணாவை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இந்த நிலையில் திருப்பதி சென்ற ரோஜா இதுகுறித்து கண்ணீர் மல்க பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அரசியல் ரீதியாக என்னை எதிர்கொள்ள முடியாததால் காழ்ப்புணர்ச்சியுடன் என்னை பற்றி அவதூறாக பேசுகிறார்கள். உலக அளவில் அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறி கொண்டிருக்கிறார்கள். இந்த நாட்களில் கூட இன்னும் பெண்களை அடக்குவதிலேயே தெலுங்கு தேசம் கட்சி குறியாக இருக்கிறது. ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள் பொய்யான விமர்சனங்களால் என் பெண்மையை கேவலப்படுத்தும் விதமாக பேசிய அவரை கூட ஆதரிக்கும் கட்சி தெலுங்கு தேசம்.
பெண் இனத்தையே அவமானப்படுத்தும் படியாக அவர் பேசினார். தெலுங்கு தேசம் கட்சியில் 10 ஆண்டுகள் இருந்தேன். அந்த கட்சியில் இருந்து வெளியே வந்தது முதல் என்னை தொடர்ந்து எத்தனை விதமாக அவமானப்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் அவமானப்படுத்தி வருகிறார்கள். ஆபாச படத்தில் நடித்தேன் என்று என்னை சித்ரவதை செய்கிறார்கள். சட்டமன்றத்துக்குள்கூட 'மார்பிங்' செய்த சி.டி.க்களை காட்டினார்கள். ஆனால் இதுவரை அதை நிரூபிக்கவில்லை. நான் ஆபாச படத்தில் நடித்ததாக கூறும் சி.டி.க்கள் உங்களிடம் இருந்தால் பொதுமக்களிடம் வெளியிடுங்கள்.
ரெக்கார்ட் டான்ஸ் ஆடியதாகவும் , லாட்ஜூக்கு போனதாகவும், ப்ளூ பிலிமில் நடித்ததாக மாஜி அமைச்சர் என்னை பற்றி கூறியுள்ளார். உங்கள் வீட்டில் மனைவி, மகள், மருமகள்கள் உள்ளார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாளை இதேபோன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களையும் பேசுவார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தால் இவ்வாறு பேசுவீர்களா? 1999ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தபோது அக்கட்சிக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டேன். அப்போது எனது கேரக்டர் சரியில்லை என புறக்கணிக்க வேண்டியது தானே. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது ரோஜா கண்ணீர் விட்டு அழுததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.