மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள படம் 'லியோ'. கடந்த 30ந் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் இதன் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடக்க இருந்தது. பாதுகாப்பு காரணங்களை கூறி அரசு இதற்கு அனுமதி மறுத்ததால் அந்த நிகழ்ச்சி ரத்தானது. இந்த நிலையில் 'லியோ' படத்தின் டிரைலர் இன்று மாலை சமூக வலைத்தளத்தில் வெளியிட இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இணையத்தில் வெளியிடப்படும் டிரைலர் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி தியேட்டர் நிர்வாகம் தியேட்டர் அருகே பெரிய திரையில் வெளியிட ஏற்பாடு செய்ததது. இதற்காக கோயம்பேடு காவல் நிலையத்தில் அனுமதி கேட்டபோது பாதுகாப்பு காரணங்களை கூறி காவல் நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டது.
இது விஜய் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தியேட்டர் நிர்வாகம் கமிஷனர் அலுவலத்தில் அனுமதி பெற முயற்சித்து வருகிறது. என்றாலும் கோயம்பேடு காவல்நிலையம் எடுத்துள்ள முடிவுக்கு மாறாக கமிஷனர் உத்தவிட வாய்ப்பில்லை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.