தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

'புது புது அர்த்தங்கள்' படத்தின் மூலம் அறிமுகமானவர் சித்தாரா. உன்னை சொல்லி குற்றமில்லை, புது புது ராகங்கள், புது வசந்தம், புரியாத புதிர், ஒரு வீடு இரு வாசல், அர்ச்சனா ஐபிஎஸ் உள்பட ஏராளமான படங்களில் நடித்தார். தென்னிந்திய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார்.
இந்த நிலையில் சித்தாரா 'சன்னிதானம் பி.ஓ (போஸ்ட்)' என்கிற படத்தில் யோகி பாபுவின் அம்மாவாக நடிக்கிறார். சபரிமலை பின்னணியில் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஒரே சமயத்தில் உருவாகிறது.
அறிமுக இயக்குநர் அமுதாசாரதி இயக்குகிறார். யோகி பாபுவுடன் கன்னட நடிகர் பிரமோத் ஷெட்டி முதன்மை வேடத்தில் நடிக்கிறார். வர்ஷா விஸ்வநாத், மேனகா சுரேஷ், மூணார் ரமேஷ், வினோத் சாகர் மற்றும் அஸ்வின் ஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர்.
படம் குறித்து இயக்குநர் அமுதாசாரதி கூறும்போது, "சிறுவயதில் தொலைந்த தனது மகனை தேடும் ஒரு தாயின் கதையை குடும்ப உணர்வுகளும் நகைச்சுவையும் சரிவிகிதத்தில் கலந்து 'சன்னிதானம் பி.ஓ' சொல்லும். தாயாக சித்தாராவும், மகனாக யோகி பாபுவும் நடிக்கின்றனர். மற்றொரு முதன்மை கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் பிரமோத் ஷெட்டி நடிக்கிறார். சபரிமலை பின்னணியில் நடக்கும் இக்கதையின் படப்பிடிப்பு நடந்து வருகிறது," என்றார்.