தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் | எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு | தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே | கமல்ஹாசன் வாழ்த்தினார் : மற்றவங்க தேசிய விருது பெற்றவர்களை பாராட்டாத சினிமாகாரர்கள் |
நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பதைத் தாண்டி குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்து வருகிறார். மாஸ்டர், விக்ரம் படங்களை தொடர்ந்து சமீபத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் கடை திறப்பு விழா ஒன்றில் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். அப்போது புதிய கெட்டப்பில் இருந்தார். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது மிஷ்கின் படத்தில் நடிப்பதற்கான தோற்றம் என தகவல் வெளியானது. ஆனால், இப்போது கிடைத்த தகவலின் படி, இந்த புதிய கெட்டப் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'விடுதலை 2' படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளுக்கான தோற்றம் என கூறப்படுகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து, கடந்த ஆண்டு விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.