‛துப்பாக்கி 2': ஐடியா பகிர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ் | சிரிக்க முடியாத நகைச்சுவை நடிகர்கள்!: மதுரை முத்து | ‛ஓ.ஜி' படத்திலிருந்து பிரியங்கா மோகன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! | ‛திரிஷ்யம் 3' படத்தின் படப்பிடிப்பு எப்போது? புதிய தகவல் இதோ! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் புதிய கூட்டணி! | பராசக்தி படத்தில் இணைந்த அப்பாஸ்! | மீசைய முறுக்கு 2ம் பாகம் உருவாகிறதா? | சரிந்த மார்க்கெட்டை காப்பாற்ற அதிரடி முடிவெடுத்த தாரா | உயர பறந்த 'லிட்டில் விங்ஸ்' : சாதனையை பகிரும் இயக்குநர் நவீன் மு | தோழிகளால் நடிகை ஆனேன்: சுபா சுவாரஸ்யம் |
விஜய்யின் லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். வரும் அக்., 19ல் படம் ரிலீஸாக உள்ளது. தற்போது ரிலீஸ் தொடர்பான இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாய் நடக்கின்றன. அதேசமயம் படம் வெளியீடு தொடர்பாக தியேட்டர் உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளருக்கும் இடையேயான பங்கு தொடர்பான பிரச்னையால் முக்கிய தியேட்டர்களில் படம் ரிலீஸாவதில் சிக்கில் நீடிக்கிறது.
இதற்கிடையே லியோ படம் வெற்றி பெற வேண்டி கோயில் கோயிலாக சென்று வருகிறார் லோகேஷ் கனகராஜ். சில தினங்களுக்கு முன்னர் லோகேஷ், இயக்குனர் ரத்னகுமார் உள்ளிட்ட அவரது குழுவினர் திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபட்டு வந்தனர். தொடர்ந்து இன்று ராமேஸ்வரம் சென்று வந்துள்ளனர் லோகேஷ், ரத்னகுமார். அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி விட்டு, கோயிலுக்கு உள்ளே உள்ள புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய லோகேஷ், பின்னர் ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மாளை தரிசனம் செய்தார். இதுதொடர்பான போட்டோக்கள் வைரலாகின.