பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் சில தினங்களுக்கு முன் வெளியானது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜூன் என பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர், அதேசமயம் படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு நடிகை மடோனா செபாஸ்டியனும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தது திடீர் சர்ப்ரைஸ் ஆக இருந்தது. விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது படம் ரிலீசுக்கு சில நாட்கள் முன்பு தான் கசிந்து, அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உறுதியானது. அதேபோல மடோனா செபாஸ்டியனும் இந்த படத்தில் நடிக்கிறார் என ரிலீஸுக்கு சில தினங்களுக்கு முன்பு ஒரு செய்தி மட்டும் பரவியது.
இந்த நிலையில் இந்த படத்தில் தான் நடித்தது குறித்து தற்போது மடோனா செபாஸ்டின் கூறும்போது, “லியோ படத்தில் நான் நடிக்கிறேன் என்று என் அம்மாவை தவிர வேறு யாருக்குமே தெரியாது. என் நண்பர்கள் வட்டத்தில் கூட இதை நான் சொல்லவில்லை. எப்படியும் இசை வெளியீட்டு விழா நடக்கும்போது இந்த விஷயம் தெரிய வரும் என எதிர்பார்த்தேன். ஆனால் விழா நடக்காததால் படம் ரிலீஸ் வரை அந்த சஸ்பென்ஸை தொடர்ந்து நீட்டிக்க வேண்டி இருந்தது. ஆனாலும் ரிலீஸுக்கு சில தினங்களுக்கு முன்பு எப்படியோ சில மீடியாக்களில் செய்தி வெளியானது.
இந்த படத்தில் நடிக்க வேண்டும் என லோகேஷ் கனகராஜ் என்னை அணுகியபோது கதை குறித்தோ, எனது கதாபாத்திரம் குறித்தோ எந்த விஷயத்தையும் சொல்லவில்லை. விஜய்க்கு தங்கையாக நடிக்கிறேன் என்பது மட்டும் தான் அவர் என்னிடம் சொன்னார். அதேசமயம் இந்த படத்தில் நடிப்பதற்காக இரண்டு வருடங்களுக்கு முன்பே அன்பறிவ் மாஸ்டர்களிடம் மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக் கொண்டேன்” என்று கூறியுள்ளார்.
அவர் கூறியதை வைத்து பார்க்கும் போது லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பாகவே லியோ படத்திற்காக மடோனா செபாஸ்டிகளை ஒப்பந்தம் செய்து விட்டார் என்பது போலத்தான் தெரிகிறது. அப்படியானால் விஜய்க்கு அடுத்ததாக லியோ படத்திற்குள் நுழைந்த இரண்டாவது நபர் மடோனா செபாஸ்டியனாகத்தான் இருக்கும்.