துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
'கேஜிஎப்' பட இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'சலார்'. இந்த வருடம் டிசம்பர் 22ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் புரமோஷன்களை படக்குழு ஆரம்பித்துவிட்டது.
இன்னும் சரியாக இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் இன்று எக்ஸ் தளத்தில் 'சலார்' படத்திற்கான எமோஜிக்களை படக்குழுவினர் அறிமுகம் செய்துள்ளார்கள். அதில் ''பிரபாஸ், சலார்' மற்றும் சில வாசகங்களை பதிவு செய்தால் அந்த எமோஜிக்கள் இடம் பெறும் விதமாக செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து படக்குழு தொடர் புரமோஷன்களில் இறங்கும் எனத் தெரிகிறது. இந்த ஆண்டு ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியான சில படங்கள் வசூல் சாதனையைப் புரிந்திருக்கிறது. தெலுங்கு, கன்னடப் படங்கள் அவ்வளவு வசூலைப் பெறாமலேயே உள்ளது. அந்த விதத்தில் 'சலார்' படம் என்ன சாதனை படைக்கப் போகிறது என தெலுங்கு சினிமா ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.