இப்பவே கூலி ரூ.200 கோடி லாபமா...? | சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக பரத் தேர்வு | இரண்டாவது வாரத்தில் தெலுங்கு திரையுலக ஊழியர்கள் ஸ்டிரைக் | உடல் மெலிந்து உருமாறிய தோற்றத்தில் அதிர்ச்சி அளித்த பிரபல குணச்சித்திர நடிகர் | மம்முட்டியை பற்றி தவறாக எதுவும் சொல்லவில்லை : பெண் தயாரிப்பாளர் விளக்கம் | ஸ்வேதா மேனனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரகுமான் | நடிகர் விஷ்ணுவர்தனின் நினைவிடம் இடிப்பு : சுதீப், ரிஷப் ஷெட்டி வருத்தம் | 65 ஆயிரம் கேட்ட பஹத் பாசிலுக்கு ஒரு லட்சம் கொடுத்தேன் : தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் | 'கேம் சேஞ்ஜர், ஹரிஹர வீர மல்லு' தோல்விகள் தரும் பாடம் என்ன? | தமிழ் சினிமாவின் 2025 வறட்சியை மாற்றுமா 'கூலி' |
பெரும்பாலும் பிரபல நட்சத்திரங்களின் சாயல் கொண்ட இளைஞர்கள் அவர்களைப் போலவே ஸ்டைலாக உடை அணிவது அவர்களைப் போலவே தோற்றத்தையும் மாற்றிக்கொண்டு சோசியல் மீடியாக்களில் புகைப்படங்கள் ரிலீஸ் வீடியோக்கள் என வெளியிட்டு தங்களை பிரபலப்படுத்தி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். பெரும்பாலும் ரஜினி, கமல் போன்றவர்களுக்கு அவர்களது இளமைக்கால தோற்றத்தில் தான் பலரும் தங்களது உருவத்தை ஸ்டைலாக மாற்றிக் கொண்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம்.
ஆனால் 72 வயதில் ரஜினிகாந்த் தற்போது இருக்கும் தோற்றத்தில், கேரளாவில் கொச்சியை சேர்ந்த டீக்கடை நடத்தி வரும் சுதாகர் பிரபு என்பவர் கிட்டத்தட்ட ரஜினியின் சாயலிலேயே பார்ப்பதற்கு ஆச்சரியம் தருகிறார். தினசரி இந்த பக்கம் வரும் இளைஞர்கள் பலரும் அவருடன் ஆர்வமாக புகைப்படம் செல்பி எடுத்துக்கொண்டு சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகின்றனர். இது குறித்த வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகின்றன.