210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே | விக்ரம் 65வது படத்தை இயக்கும் ‛பார்க்கிங்' இயக்குனர் | நாகார்ஜுனா Vs ஜுனியர் என்டிஆர் - கூடுதல் பலத்தைக் கொடுக்கப் போவது யார் ? | சீக்கிரம் சசி உடன் மீண்டும் ஒரு படம் : விஜய் ஆண்டனி | இப்பவே கூலி ரூ.200 கோடி லாபமா...? | சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக பரத் தேர்வு | இரண்டாவது வாரத்தில் தெலுங்கு திரையுலக ஊழியர்கள் ஸ்டிரைக் |
2025ம் ஆண்டு இதுவரையில் வெளியான 162 படங்களில் 10 படங்கள் மட்டுமே வியாபார ரீதியாக லாபத்தைக் கொடுத்த படங்கள் என்று சொல்கிறார்கள். இந்த வருடத்தின் 8வது மாதத்தில் வந்துவிட்டோம். ஆனாலும், ஒரு படத்தின் அதிகபட்ச வசூல் என்பது 300 கோடியை இன்னும் கூட தாண்டவில்லை. அதிகபட்சமாக 'குட் பேட் அக்லி' படம் 250 கோடியைக் கடந்திருக்கலாம் என்கிறார்கள்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இதே போன்றதொரு நிலைமைதான் இருந்தது. செப்டம்பர் மாதத்தில் வெளிவந்த 'தி கோட்' படம், அக்டோபர் மாதத்தில் வெளிவந்த 'அமரன்' படம் ஆகியவை 300 கோடி வசூலைக் கடந்த படங்களாக அமைந்தன. இந்த வருடத்திலும் 8 மாதங்கள் வரையில் ஒரு படம் கூட 300 கோடியைத் தாண்டவில்லை என்பது அதிர்ச்சிகரமான ஒன்றுதான்.
இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ள 'கூலி' படம் இந்த 2025ம் வருடத்தின் வறட்சியான வசூலை மாற்றும் என்ற நம்பிக்கை திரையுலகினருக்கு ஏற்பட்டுள்ளது. படத்திற்கான முன்பதிவு தான் அந்த நம்பிக்கையைத் தந்துள்ளது. 300 கோடி வசூலை மட்டுமல்ல 500 கோடி வசூலையும் இந்தப் படம் நிச்சயம் கடந்துவிடும் என்று எதிர்பார்க்கிறார்கள். அது 1000 கோடியாக மாறுமா என்பது படம் வந்த பிறகே தெரிய வரும்.