2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர், டான் போன்ற படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பிரியங்கா மோகன். தற்போது தனுஷ் உடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், சிவகார்த்திகேயனின் வீக்னெஸ் குறித்த ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார். அது என்னவென்றால், சிவகார்த்திகேயனுக்கு இனிப்பு சாப்பிடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அதற்கு அவர் அடிமையாகி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். படப்பிடிப்பு தளத்தில் எப்போதுமே ஏதாவது இனிப்புகளை சாப்பிட்டுக் கொண்டே இருப்பார். அவர் சாப்பிடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் அருகில் இருக்கும் நம்மையும் சாப்பிடச் சொல்லி வலியுறுத்துவார் என்று சிவகார்த்திகேயன் குறித்த ஒரு தகவலை அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் பிரியங்கா மோகன்.