ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் | 2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் |

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. கடந்த சில வருடங்களாக பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.
இரண்டாம் பாகம் என ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படத்தை மூன்றாவது பாகத்திற்கும் சேர்த்து படமாக்கியுள்ளதாகச் சொல்கிறார்கள். தயாரிப்பு நிறுவனமும் அதற்கு சம்மதித்து கலைஞர்களுக்கு கூடுதல் சம்பளத்தையும் தரச் சம்மதித்துள்ளதாம். மூன்றாம் பாகத்திற்கான சில காட்சிகளைப் படமாக்க வேண்டியிருப்பதால் அவற்றின் படப்பிடிப்பும் விரைவில் ஆரம்பமாக உள்ளதாகச் சொல்கிறார்கள்.
'இந்தியன் 2' படத்தை 2024ம் ஆண்டின் கோடை விடுமுறையிலும், 'இந்தியன் 3' படத்தை 2025ம் ஆண்டு பொங்கலுக்கும் வெளியிடலாமா என யோசித்து வருகிறார்களாம். 'இந்தியன் 2' படத்திற்கும் 'இந்தியன் 3' படத்திற்கும் இடையில் “கமல்ஹசான் 233' மட்டும் வெளியாகலாம் எனத் தெரிகிறது. 'இந்தியன் 3' படத்திற்குப் பிறகுதான் மணிரத்னம், கமல்ஹாசன் இணையும் 'கமல்ஹாசன் 234' வெளியாகலாம் என்கிறார்கள்.




