துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
சிவகார்த்திகேயன் நடித்த டான் என்ற படத்தை இயக்கியவர் சிபி சக்ரவர்த்தி. இந்த படம் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது. அதையடுத்து ரஜினியை சந்தித்து அவர் கதை சொன்னதால் அடுத்து ரஜினி நடிக்கும் படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்குவார் என்று செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் சிபி சக்ரவர்த்தி சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்காததால் அந்த முயற்சி நடைபெறவில்லை. இதனால் மீண்டும் அவர் சிவகார்த்திகேயனிடமே சென்றார்.
ஆனால் அவரோ, தனது கைவசம் இரண்டு படங்கள் இருப்பதாக சொன்னவர், அந்த படங்கள் முடிந்த பிறகு நாம் இணையலாம் என்று வாக்குறுதி கொடுத்தார். அதனால் இன்னும் இரண்டு படங்களை முடித்து விட்டுதான் அவர் தனக்கு கால்சீட் தருவார் என்பதால் அந்த இடைவெளியில் ஒரு படத்தை இயக்க, தெலுங்கு நடிகர் நானியிடம் கதை சொல்லி ஓகே செய்திருக்கிறார் சிபி சக்ரவர்த்தி. தற்போது அப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக உள்ளது.