பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்று கலக்கி வரும் வாணி போஜன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, ரேக்ளா, ஆர்யன் என வரிசையாக படங்களை கையில் வைத்திருக்கும் அவர், தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வரிசையாக படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில், ‛சில படங்களில் தேவையில்லாமல் படுக்கையறை காட்சிகளை வைக்கிறார்கள். அந்த காட்சி படத்திற்கு தேவையில்லை. எனவே, நான் ஏன் மசாலாவாக அந்த காட்சியை எடுக்கிறீர்கள் என்று கேட்டேன். அதன்பின் அந்த காட்சியை எடுக்காமல் முடித்தார்கள். நடிப்பு என்று வரும் போது கதாபாத்திரம் தான் முக்கியம். கதாபாத்திரமும் கதைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். பணத்தை விட நான் நடிக்கும் கதாபாத்திரம் தான் முக்கியமானது' என்று கூறியுள்ளார்.