இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
தமிழ் சினிமாவில் தற்போதைக்கு இருபது ஹீரோ நடிகர்கள் வரை தொடர்ச்சியாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நடித்து வெளியாகும் படங்களில் ஒரு சில படங்கள்தான் வெற்றி பெறுகின்றன, சில படங்கள் தோல்வியடைகின்றன. வெற்றி, தோல்வி பொறுத்துதான் அடுத்த படங்களின் வாய்ப்புகளும், சம்பளமும் அமைகின்றன.
இந்நிலையில் சில நடிகர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகும் சீரிஸ்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். முன்னணி நடிகர்களைப் பொறுத்தவரையில் விஜய் சேதுபதி ஹிந்தியில், “பார்சி” சீரிஸில் நடித்தார். அத்தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஆர்யா 'த வில்லேஜ்' என்ற சீரிஸில் முதல் முறையாக நடித்துள்ளார். இத்தொடர் இந்த வாரம் நவம்பர் 24ம் தேதி வெளியாக உள்ளது.
அருண் விஜய் 2022ல் வெளிந்த 'தமிழ் ராக்கர்ஸ்' சீரிஸில் நடித்தார். ஜெய் நடிப்பில் 'லேபில்' சீரிஸ் கடந்த வாரம் வெளியானது. அதர்வா நடித்த 'மத்தகம்' சீரிஸ் ஆகஸ்ட் மாதம் வெளியானது. விமல் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'விலங்கு' சீரிஸ் பரபரப்பான வரவேற்பைப் பெற்றது.
குறிப்பிட்ட இடைவெளியில் இந்த சீரிஸ்கள் வந்தாலும் சினிமாவைப் போன்ற வரவேற்பைப் பெறாமல் இருக்கின்றன. டாப் நடிகர்கள் அல்லது டாப் இயக்குனர்கள் யாராவது இதற்கு முன்பு எடுத்தது போன்ற குட்டிக் கதைகள் இல்லாமல் முழு நீள சீரிஸ்கள் எடுத்தால் மட்டுமே அந்த ரசிகர்களைக் கவர வாய்ப்புள்ளது.