பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

'மீ டூ' என்ற விவகாரம் வந்த பிறகு பல நடிகைகள் அவர்களது வாழ்க்கையில் நடந்த சில பாலியல் துன்புறுத்தல்களைப் பற்றி வெளிப்படையாக பேச ஆரம்பித்தார்கள். ஆனால், இன்னமும் சிலர் பேசத் தயங்கி வருகிறார்கள்.
'பிக் பாஸ் சீசன் 7' நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் நடிகை விசித்ரா சில தினங்களுக்கு முன்பு ஒரு காலத்தில் தெலுங்குப் படம் ஒன்றில் அவருக்கு நேர்ந்த சில துரத்தல்கள், தொல்லைகள், அடிகள் பற்றி உணர்வுபூர்வமாகப் பேசியிருந்தார்.
அவர் நடித்த படத்தின் கதாநாயகன் அவரை படுக்கையறைக்கு அழைத்ததாகக் குற்றம் சாட்டியிருந்தார். படத்தின் பெயர், கதாநாயகன் யார் என அவர் குறிப்பிட்டுப் பேசவில்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் அந்த நடிகர் பாலகிருஷ்ணா, அந்தப் படம் 'பலேவடிவி பாசு' என்ற தெலுங்குப் படம் என எழுதி வருகிறார்கள்.
இதனால், கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம்தான் விஸ்வரூபமெடுத்துள்ளது. ஆனால், விசித்ரா குற்றச்சாட்டுக்கு தமிழ் சினிமாவிலிருந்து இதுவரை யாரும் ஆதரவுக் குரல் கொடுக்கவில்லை.
சமீபத்தில் த்ரிஷா பற்றி மன்சூரலிகான் பேசியதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து அவர் தற்போது போலீஸ் விசாரணை வரை சென்றுள்ளார். விசித்ரா விவகாரத்திற்கு 'மீ டூ'விற்காகக் குரல் கொடுத்து தமிழ் சினிமாவின் பெண் பிரபலங்களாவது குரல் கொடுப்பார்களா ?.