ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

கடந்த சில நாட்களாகவே நடிகை த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் அநாகரிகமாக பேசிய வார்த்தைகள், அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் நடிகை விசித்ரா தான் சினிமாவில் நுழைந்த காலகட்டத்தில் தெலுங்கு திரை உலகில் தனக்கு கொடுக்கப்பட்ட பாலியல் தொந்தரவுகள் குறித்து பேசியது என தமிழ் சினிமாவில் ஒரு பரபரப்பு தொடர்ந்து நிலவி வருகிறது. இந்த நிலையில் நடிகை மனிஷா யாதவுக்கு இயக்குனர் சீனு ராமசாமி பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்கிற குற்றச்சாட்டை சோசியல் மீடியாவில் யு-டியூப் விமர்சகர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
அதாவது சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி இன்னும் வெளியாகாமல் இருக்கும் இடம் பொருள் ஏவல் என்கிற படத்தில் நடித்தபோது அதில் நடித்த மனிஷா யாதவுக்கு சீனு ராமசாமி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார் என்றும், அது குறித்து ஒரு பேட்டியில் தன்னிடம் மனிஷா கூறியுள்ள ஆதாரங்கள் இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இயக்குனர் சீனு ராமசாமியும், இதுகுறித்து உடனே ஒரு பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மனிஷா யாதவ் கதாநாயகியாக நடித்து வெளியான ஒரு குப்பை கதை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மனிஷா தனக்கு நன்றி தெரிவித்து பேசிய வீடியோ கிளிப் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள சீனு ராமசாமி, “நான் அவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருந்தால், பின் எதற்காக எனக்கு நன்றி சொல்லி பேசியுள்ளார்.. 10 வருடங்கள் சினிமாவில் நடித்துவிட்டு தான் அவர் போயிருக்கிறார். மீண்டும் வாய்ப்பு இருந்தால் என் படத்திலேயே அவர் நடிப்பார்” என்று கூறியுள்ளார்.