'தக் லைப்' விவகாரம் : அப்போது குரல் கொடுக்காத விஜய்.. | ஜெயலலிதா மீது விமர்சனம்: கல்லெறியில் இருந்து காப்பாற்றிய பாக்யராஜ்: ரஜினி சொன்ன ரகசியம் | 'படையப்பா, பாபா' படங்களின் ரிசல்ட்: ஜோசியர் போல சொன்ன பாக்யராஜ்: சுவாரஸ்யம் பகிர்ந்த ரஜினி | 'புஷ்பா 2' சாதனையை முறியடித்த 'துரந்தர்' | கடைசி நேர பரபரப்பில் 'பராசக்தி' தணிக்கை விவகாரம் | ''சினிமாவுக்கு கடின காலம்... காப்பாற்றுங்கள்'': குரல் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ் | 'டாக்சிக்' படத்தால் பின்வாங்கியதா 'ஜனநாயகன்' ? | பின்வாங்கியது ஜனநாயகன்... முந்துமா பராசக்தி | விஜய்க்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்த அருள்நிதி பட இயக்குனர் | டாக்சிக் படம் : யஷ் பிறந்தநாளில் இந்த மாதிரியா அறிமுக வீடியோ வெளியிடுவது.? |

நடிகை சிம்ரன் 90களின் மத்தியில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நுழைந்தார். நுழைந்த வேகத்திலேயே ஒரே சமயத்தில் நான்கு படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி நடித்தார். அதை தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களிலும், கதையம்சம் கொண்ட படங்களிலும் தொடர்ந்து நடித்து பல வருடங்கள் நம்பர் ஒன் இடத்தில் இருந்தார். இதற்கு பின்னணியில் அவருக்கு உறுதுணையாக நின்று படங்களை தேர்வு செய்து கொடுப்பதில் அவரது மேலாளர் காமராஜன் என்பவர் பக்கபலமாக இருந்தார். இந்த நிலையில் நேற்று காமராஜன் உடல் நலக்குறைவால் காலமானார். இதுகுறித்து தனது வருத்தத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி காமராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகை சிம்ரன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நம்ப முடியாத அதிர்ச்சி தருகின்ற ஒரு செய்தி. என்னுடைய அன்பு நண்பர் எம்.காமராஜன் இப்போது இல்லை.. கடந்த 25 வருடங்களாக எனது வலது கையாக, எனக்கு ஆதரவுத் தூணாக எப்போதுமே சிரித்த முகத்துடன் ஒரு புத்திசாலித்தனமான நம்பகத்தன்மை கொண்ட மனிதராக வலம் வந்தவர். அவர் தன்னை தானாகவே உருவாக்கிக் கொண்ட ஒரு மனிதர். நீங்கள் இல்லாமல் சினிமாவில் எனக்கு எதுவுமே சாத்தியம் ஆகி இருக்காது. உங்களது வாழ்க்கை பல பேருக்கு பெரிய அளவில் மாற்றத்தை கொடுத்திருக்கிறது. உங்களுடைய குடும்பத்திற்கும் உங்களை நேசிப்பவர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்.. ஓம் சாந்தி..” என்று கூறியுள்ளார் சிம்ரன்.